×

அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் பனையப்பட்டி- ராங்கியம் சாலையில் வேகத்தடை

திருமயம்,மார்ச்17: திபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டியில் இருந்து ராங்கியம் செல்லும் சாலையில் வீராணம்பட்டி விலக்கு ரோடு உள்ளது. அப்பகுதியில் வீராணம்பட்டி, குழிபிறை, ராங்கியம், பனைப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் சென்று வருகின்றன. அஜாக்கிரதையாக வரும் வாகனங்கள்,அப்பகுதியில் நடமாடும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்குகிறது. இது போன்று அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனிடையே பகல் நேரத்தில் விபத்தில் சிக்குபவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இரவு நேரத்தில் விபத்தில் சிக்குபவர்களை மீட்பதில் சிரமம் உள்ளது. எனவே அப்பகுதியில் வரும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை இல்லை.
இதையடுத்து கலெக்டாிடம் நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் வீராணம்பட்டி சாலை சந்திப்பில் இனிமேல் விபத்து நடக்காமல் இருக்க பனையப்பட்டியில் இருந்து ராங்கியம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஏரல்-சூழவாய்க்கால் இடையே பழமையான...