×

வாகனஓட்டிகள் வலியுறுத்தல் அரசு மருத்துவமனை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருமயம்,மார்ச்17: திஉலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து நாடுகளும் வைரசில் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 70க்கும் மேற்பட்டடோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதனததால் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரதுறை தமழக மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இதனிடையே நேற்று திருமயம் அரசு மருத்துவமனை சார்பில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் திருமயம் அரசு மருத்துவமனை டாக்டர் கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போதுஅவர் பேசுகையில், கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ள கை கழுவும் முறை, சிகிச்சை முறை, சுற்றுபுறச் சூழல் பராமரிப்பு குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினார். மேலும் தற்போது அதிகளவில் மாணவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில் வதந்திகளை நம்பாமல் இருப்பதோடு அதனை பரப்புவதையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு டாக்டர் கண்ணன் பதிலளித்தார்.

Tags : Government Hospitals ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில்...