×

வீடு, கடையில் நகை, பணம் திருட்டு

கோவை, மார்ச் 17: கோவை மாவட்டத்தில் வீடு, கடையில் நகை, பணம் திருட்டு போனது.கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (30). ஜெராக்ஸ் கடை உரிமையாளர். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்ப வந்தார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமுகை அண்ணா நகரை சேர்ந்த முகமது ரூமி (53) என்பவர் ஸ்டோர் வைத்துள்ளார். இவர் கடையில் இருந்த 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கடை பூட்டை உடைத்து திருடி சென்றனர். சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : House ,
× RELATED ஈரோடு மாவட்டம் கோபி அருகே கட்டிடத்...