×

கலெக்டர் பேச்சு கோடை துவங்கியதால் எலுமிச்சை பழம் விலை உயர்வு

அரியலூர், மார்ச் 17: டையையொட்டி எலுமிச்சை விலைஉயர்ந்து வருகிறது. கோடைகாலம் துவங்கும் முன்பே அரியலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட குளர்ச்சியை ஏற்படுத்தும் பானங்களில் எலுமிச்சை சாறு முதன்மையாக திகழ்கிறது. அரியலூர் மாவட்டத்தில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்தே தேவைக்காக எலுமிச்சை வரவழைக்கப்படுகிறது. திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து எலுமிச்சைபழம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. உச்சத்தில் இருந்த எலுமிச்சை விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சரிந்தது. கிலோ ரூ.30 முதல் ரூ.40வரை விற்பனையாகிக்கொண்டிருந்தது.

வெயில்காலத்தையொட்டி எலுமிச்சையின் தேவை அதிகரித்து விட்டதால் விலையும் தற்போது உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.60முதல் ரூ.80வரை விலைஉயர்ந்திருக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் எலுமிச்சை சாகுபடிக்கு என தனியாக தோட்டங்கள் இல்லை. விவசாய தோட்டங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மரங்கள் வைக்கப்பட்டு காய்கள் பறிக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து எலுமிச்சை வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு ரூ.2க்கு விற்ற எலுமிச்சை தற்போது ரூ.5 மற்றும் ரூ.7ஆகி விட்டது. கோடைவெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வேளையில் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Collector talk ,
× RELATED விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றிட...