×

கொரோனா வைரஸ் எதிரொலியால் நோய் தொற்றை தடுக்கும் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

பெரம்பலூர்,மார்ச் 17: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நோய் தொற்றினை தடுக்கும் சோப், திரவசோப், சானிடைசர், முகக்கவசம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமுலாக்கம்) முகமது யூசுப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : கொரோனா வைரஸ் பரவு தலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் சோப், திரவசோப், சானிடைசர், முகக்கவசம் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் வணிக நிறுவனங்கள் இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

எனவே சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011ன்படி பொருட்களில் குறிப்பிட்டுள்ள விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள், வணிக நிறுவனங்கள், மருந்து கடை மற்றும் விற் பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களில் தொழிலா ளர் உதவி ஆணைய அலு வலக அதிகாரிகள் திடீராய் வு மேற்கொள்ளவுள்ளனர். அப்போது அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செ ய்வது கண்டறியப்பட்டால் அந்தப் பொருட்களை பறி முதல் செய்வதோடு, அந்த வணிக நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடு க்கப்படும் என தொழிலா ளர் உதவி ஆணையர்(அமு லாக்கம்) முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

Tags : Assistant Commissioner ,Labor ,
× RELATED நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் உட்பட 12 பேருக்கு கொரோனா