×

அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல் நாட்டார்மங்கலத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பூக்கள் எடுத்து சென்ற பக்தர்கள்

பாடாலூர், மார்ச் 17: சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் இருந்து 5ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவுக்கு பூக்களை எடுத்து சென்றனர். அதன்படி ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூச்சொரிதல் வாகனத்தில் மூலம் மாரியம்மன் கோவில் முன் துவங்கி முக்கிய வீதியின் வழியாக வீதியுலா நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு முன் தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் சமயபுரம் கோயிலுக்கு வாகனத்தில் பூக்கள் எடுத்து செல்லப்பட்டது.

Tags : Devotees ,Nadarmangalam ,Samayapuram Mariamman Temple ,
× RELATED இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை...