×

ஜெயங்கொண்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்கு எஸ்பி பாராட்டு

ஜெயங்கொண்டம், மார்ச் 17:ஜெயங்கொண்டத்தில் விபத்தை தடுக்கும் பொருட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் னிவாசன் தொடங்கி வைத்தார். இதில் ஹெல்மெட் அணிவது குறித்து ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விபத்து ஏற்படுத்துவதை தத்ரூபமாக நடித்துக் காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.முன்னதாக ஹெல்மெட் அணிவதின் அவசியம் மற்றும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ஏற்படும் விபத்து மற்றும் உயிர் சேதம் பற்றி தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். சுமார் இரண்டு மணிநேரம் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்து ஏற்படுத்தாமல் இருப்பதற்கு தத்ரூபமாக விபத்து ஏற்பட்டதை போலவும், அவரை காப்பாற்றுவது போன்றும், இதனால் எத்தனை குடும்பங்கள் தவிக்கிறது என்பது உள்ளிட்ட தத்ரூப நிகழ்ச்சிகளை மாடர்ன் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர். மாணவர்களுக்கு எஸ்பி னிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Jayankondam ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் சிறுதானிய உணவு திருவிழா