×

பெருந்துறை அரசு மருத்துவமனையில் காலை, மாலை இலவச உணவு

பெருந்துறை, மார்ச் 17: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தினமும் 250க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், உள் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு காலை, மாலை இருநேரமும் இலவச உணவு வழங்குவதாக சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி தெரிவித்துள்ளார். இதுதவிர பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளியுடன் வந்து காத்திருப்பவர்களுக்கு தனியாக 22 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடத்தை சக்தி மசாலா நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதை பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் திறந்து வைத்தார். சக்தி மசாலா நிறுவனர் சாந்தி துரைசாமி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார் பெருந்துறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தி வரவேற்றார். சக்திதேவி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பி.சி. துரைசாமி பேசுகையில்,`சக்தி மசாலா சார்பில் இங்கு வரும் உள்நோயாளிகள், புறநோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் அனைவருக்கும் காலை, மாலை என இருநேரமும் உணவு  இலவசமாக வழங்கப்படும்’ என்றார்.எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் பேசுகையில்,`பெருந்துறை பகுதிக்கு சக்தி மசாலா நிறுவனம் தனது சொந்த செலவில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு உதவி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், பெருந்துறையில் நன்கு வளர்ந்து நிற்கும் சக்தி மசாலா நிறுவனம் தனது நன்றிகடனாக பெருந்துறைக்கு ஏராளமாக நிதி உதவி செய்துள்ளது’ என்றார். விழாவில், ஈரோடு சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Perundurai Government Hospital ,
× RELATED காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை...