×

எம்.பி.என். எம்.ஜெ. கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

ஈரோடு, மார்ச் 17: சென்னிமலை எம்.பி .நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்  நடைபெற்றது. கல்லூரி தாளாளர் பாரத் வித்யா சிரோமணி டாக்டர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார். முதல்வர் எம்.ரமேஷ்  முன்னிலை வகித்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக ஈரோடு கிளை மேலாளர் வி.எ.ராஜேந்திரன் கலந்து கொண்டு  பேசினார். அப்போது, மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பை மட்டும் நம்பியிருக்காமல் தொழில் முனைவதற்கு தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டு தொழில்களை துவங்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழில் முனைவோருக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சிறப்பு சலுகைகள், கடன்கள் மற்றும் மானியங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.விழாவுக்கான ஏற்பாடுகளை  ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

Tags : MJ Entrepreneurship Seminar in College ,
× RELATED எம்.பி.என். எம்ஜெ கல்லூரியில் விளையாட்டு விழா