×

கொள்ளிடத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா திமுக ஒன்றியக்குழு தலைவர் புறக்கணிப்பு

கொள்ளிடம், மார்ச் 17: நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன் பிடி துறைமுக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மீன் விற்பனை கூடம் கட்டும் பணியையும், ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை புதியதாக கட்டும் பணியையும், சீர்காழி எம்எல்ஏ பாரதி துவக்கி வைத்தார். பின்னர் புதுப்பட்டினம் கடைவீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுமதி ராஜேந்திரன், பிடிஓ இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மூன்று நிகழ்ச்சிகளும் பழையாறு, புதுப்பட்டினத்தில் நடைபெற்றது. இதர பகுதிக்கு ஒன்றியக்குழு உறுப்பினராக திமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயப்பிரகாஷ், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் அரசு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆனால் ஒன்றியக்குழு தலைவரான ஜெயப்பிரகாஷுக்கு தெரிவிக்காமலும், எந்த அழைப்பு கொடுக்காமலும், இந்த மூன்று அரசு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளதால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பழையாறு, புதுப்பட்டினம் மற்றும் தற்காஸ் கிராம வாரிசுகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : opening ceremony ,DMK Union ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா