×

நாகையில் குறைதீர் நாள் கூட்டம்

நாகை,மார்ச் 17: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டிஆர்ஓ இந்துமதி தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 7 மனுக்களும், பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 414 மனுக்கள் என மொத்தம் 421 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள டிஆர்ஓ இந்துமதி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தனித்துணை ஆட்சியர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Naga ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...