×

நாகை பாப்பாகோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் மகளிர் தின விழா

நாகை, மார்ச் 17: நாகப்பட்டினம் பாப்பாகோயில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் சிங்கப் பெண்ணே என்ற தலைப்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிந்தனை பேச்சாளர் முனைவர் ஜெயந்தி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு “பெண்மை என்னும் பெரும் பொறுப்பு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மூன்று பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போராடி உழைக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கும் நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சமூக சேவகி பத்ம பூஷன் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும், வேளாங்கண்ணி மிஷினரிஸ் ஆப் சாரிட்டி கருணை இல்லத்தை சார்ந்த சமூக சேவகி அருட் சகோதரி ப்ரான்சினாவுக்கும் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதும், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மிருதுளாவுக்கு இளம் விஞ்ஞானி விருதும் சிறப்பு விருந்தினர் வழங்கி கவுரவித்தார். கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சங்கர் நன்றி கூறினார். மேலும் இவ்விழாவில் அனைத்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவ,மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாகை மாவட்ட ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். கல்லூரி சமூக வலைதளத்தின் யூடியூர் சேனல் மூலமாக நேரடியாக சுமார் 4,500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியினை கண்டு களித்துள்ளனர்.

Tags : Isaac Newton College ,Women's Day Ceremony ,Nagoya Papago ,
× RELATED கரூர் நீதிமன்றத்தில் மகளிர் தின விழா