×

வேதாரண்யம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிக்கு குப்பை அள்ளும் வாகனங்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

வேதாரண்யம், மார்ச் 17: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் குப்பை அள்ளும் லோடு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. தூய்மை இயக்கத்தின் நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டது. தலா ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 25 வண்டிகளை 23 ஊராட்சிகளுக்கு அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா தலைமை வகித்தார். மாவட்டஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், சோழன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அறிவழகன். மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கிரிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், ராஜூ, நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Minister of Transport ,OS Maniyan ,Vedaranyam Union ,
× RELATED 2,517 வாகனங்கள் பறிமுதல்