×

வேதாரண்யத்தில் தீ விபத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வர்த்தக சங்கம் நிதி உதவி

வேதாரண்யம், மார்ச் 17: வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதையறிந்த வேதாரண்யம் வர்த்தக சங்கம் மற்றும் நகை அடகு கடை சங்கம் சார்பில் மணிமாறன் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், மாநில துணைத்தலைவருமான தென்னரசு, வேதாரண்யம் நகர நகை அடகு கடை சங்கத் தலைவர் அம்பாள் குணசேகரன், வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு நிதி உதவியை வழங்கினர்.

Tags :
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு