×

ஆவுடையானூரில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

பாவூர்சத்திரம், மார்ச் 17: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூரில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா நடந்தது.  தென்காசி மாவட்டம் ஆவுடையானூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் செயல்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  அதற்கான அரசாணை பெற்றுக்கொடுத்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆவுடையானூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் வரவேற்றார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் லட்சுமணன், முன்னாள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய துணை செயலாளர் குணம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், மில்வேலன், தர்மராஜ், ராஜேந்திரன், பாஸ்கர், கதிரவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள்ராஜ் நன்றி கூறினார்.

Tags : Commendation Ceremony ,Selvamomandas Pandian MLA ,
× RELATED ரூ.23 லட்சத்தில் சாலைப்பணி...