×

கடையநல்லூர் ரத்னா பள்ளி ஆண்டு விழா

கடையநல்லூர், மார்ச் 17: கடையநல்லூர் ரத்னா ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கு ரத்னா உயர்நிலைப் பள்ளி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ரத்னா பள்ளிகளின் நிர்வாகி ரத்னா பிரகாஷ் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை தங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். கடையநல்லூர் ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் தலைவர் மோதிலால், செயலாளர் பரமசிவன், முன்னாள் துணை ஆளுநர் செண்பக அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வி, மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.  தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. துணை தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த ஆசிரியர்கள் பிரகாஷ், கணேஷ், மனோஜ் குமார், கோபிநாத் மற்றும் அனைத்து ஆசிரியர்களையும், மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளித்த ஆசிரியைகளையும் பள்ளியின் நிர்வாகி ரத்னாபிரகாஷ் பாராட்டினார்.

Tags : Kadayanallur Ratna School Anniversary ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது