×

முஸ்லிம் லீக் கொடியேற்று விழா

கடையம்,மார்ச் 17: கடையம் அருகே  உள்ள ரவணசமுத்திரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடந்தது.   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 73 வது நிறுவன தினத்தை   ரவண சமுத்திரத்தில் கொடியேற்று விழா நடந்தது. தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன், மாவட்ட துணை செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது, மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர் நவாஸ்கான், ஆலங்குளம் தொகுதி அமைப்பாளர் யஹ்யா, அப்பல்லோ ரிபாய், நகரத் துணைச் செயலாளர் காசியார், யாகூப், வெள்ளி பீர், செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், செயலாளர் இக்பால், தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி முகம்மது அலி ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் பீரப்பா வரவேற்றார்.நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய ஒருமைப்பாடு, ஜனநாயகம், சமய நல்லிணக்க பாதுகாப்பு  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட மாணவர் அணி பொருளாளர் தமீம் அன்சாரி நன்றி கூறினார். மாவட்ட மகளிரணி தலைவி சபுரா பேகம், ரவணசமுத்திரம் பிரைமரி  தலைவர் இக்பால் ஆகியோர் பிறைக்கொடிகளை ஏற்றி வைத்தனர்.


Tags : Muslim League Flag Festival ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு