×

செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் வட்டார கலாச்சார கலைவிழா


மயிலாடுதுறை, மார்ச் 17: நாகைமாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் வட்டார அளவிலான கலாச்சார கலைவிழா நடைபெற்றது. வட்டார அளவில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலாச்சார கலைவிழா நடந்தது. விழாவை கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குடியரசு தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதில் நடனம், பாட்டு, ஓவியம், தமிழரின் கலாச்சார நாடகங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இதில் தரங்கம்பாடி வட்டார அளவில் உள்ள 21 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பொறையார் விஸ்டம் பள்ளி முதல் பரிசும்,செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இரண்டாம் பரிசையும், ஆக்கூர் விவேகானந்தா பள்ளி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் கலைமகள் பள்ளி முதல்வர் ராஜ்பரத்,மேரிரெக்சொலின், துணை முதல்வர் கவிதா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Regional Cultural Festival ,Kalamazoo Metric School ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை...