புளியங்குடி பள்ளியில் உலக வனவிலங்கு தினவிழா

புளியங்குடி, மார்ச் 17: புளியங்குடி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் உலக வனவிலங்கு தினவிழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் முத்துகுமரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பாம்புகளின் ஆராய்ச்சியாளர் ஷேக்உசேன், வனக்காப்பாளர் பாரதி பங்கேற்று வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி கமிட்டி செயலாளர் ராமையா, தலைமை ஆசிரியர் ஆகியோர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கினர். பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>