×

ஆலங்குளம் பகுதியில் குற்ற செயல்களை தடுக்க நிறுவனங்கள் முன்பு சிசிடிவி கேமரா

ஆலங்குளம், மார்ச் 17: ஆலங்குளம் பகுதியில் குற்ற செயல்களை தடுக்க தங்களது நிறுவனங்கள் முன்பு சிசிடிவி கேமரா பொருத்துமாறு டிஎஸ்பி ஜாகீர் உசேன் கேட்டுக்கொண்டார். ஆலங்குளத்தில் காவல் துறை சார்பில் குற்ற செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலங்குளம் டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் மாரீஸ்வரி (சுரண்டை), தனலட்சுமி (ஊத்துமலை), ஆதிலட்சுமி (கடையம்), ரோஸ்லின் சவியோ (ஆலங்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் டி.எஸ்.பி. ஜாகீர்உசேன் பேசுகையில், ‘ஆலங்குளம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கையை ஏற்று வாகன சோதனைகள் நகரத்தின் மையப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், ஊத்துமலை, கடையம், ஆழ்வார்குறிச்சி, வீரகேரளம்புதூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்க வேண்டும். திருட்டு, விபத்துகள் நடக்காதவாறு பாதுகாக்க வேண்டி தொழிலதிபர்கள் தங்களின் நிறுவனங்களில் தரமான சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் நிறுவனங்களின் வெளிப்புறம் மின்சார விளக்குகளை அணைக்க வேண்டாம்’ என்றார்.  கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், உமா மகேஷ்வரி, சந்திரசேகரன், பாரத்லிங்கம், ஜான்சன்கென்னடி, கல்யாணசுந்தரம், சின்னதுரை, பலவேசம், காஜாமுகைதீன், முருகேசன்  தொழிலதிபர்கள் கணேசன், முருகன், சுரேஷ், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : area ,Alangulam ,
× RELATED வாட்டி வதைக்கும்...