×

முக்கூடல் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

பாப்பாக்குடி, மார்ச் 17:  முக்கூடல் முத்துமாலையம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக பிற்பகல் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜை தொடங்கியது. சிறப்பு ஜோதியை உஷா ஜெய மனோகர், உமா கதிரேஷ் ராம்சேட், கிருஷ்ணவேணி சொக்கலால் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜையை துவக்கினர்.இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் சமுதாய தலைவர் சொக்கலால் தலைமையில் விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Tiruvallu Pooja ,Tri-Temple Temple ,
× RELATED திருச்சுழியில் 1008 திருவிளக்கு பூஜை