8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து நாங்குநேரி தொகுதியில் கூட்டு குடிநீர் திட்டம்

நெல்லை, மார்ச் 17: தமிழக சட்டபேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மானிய கோரிக்கையில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் பேசுகையில், ‘நாங்குநேரி தொகுதியில் பேரூராட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.   இதற்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, ‘நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு, நாங்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, ராதாபுரம் தொகுதி உட்பட்ட வடக்குவள்ளியூர், திசையன்விளை மற்றும் பணகுடி ஆகிய எட்டு ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ரூ.131 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்’ என்றார்.

Related Stories:

>