×

தொழிலாளி மீது தாக்குதல்

சாத்தான்குளம், மார்ச் 17: சாத்தான்குளம்  அருகே பண்டாரபுரத்தைசேர்ந்தவர்  ஜெயவர்த்தன காபிரியேல்(41) தொழிலாளி. இவரது உறவினர் பெண்ணிடம் இதே பகுதி தர்மராஜ் மகன் தினேஷ் அடிக்கடி போனில் பேசி தொல்லை கொடுத்தாராம்.  இதனை காபிரியேல் கண்டிக்கவே இவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது.  நேற்று முன்தினம் தினேஷ், அவரது சகோதரர் ஸ்டீபன் சுருள்ராஜ்,  கல்விளையை சேர்ந்த துரை, முத்து, சிவா ஆகியோர் காபிரியேலை இரும்பு  கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில் எஸ்ஐ பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அண்ணன், தம்பி உள்ளிட்ட 5 பேரை தேடி வருகிறார்.

Tags :
× RELATED நடைமேம்பாலத்தை சீரமைக்கும்போது தவறி...