×

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

கோவில்பட்டி, மார்ச் 17: கோவில்பட்டி வேலாயுதபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேம்பாலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். இவர்கள், கோவில்பட்டி வள்ளுவர் நகர் 6வது தெருவை சேர்ந்த அருணாசலம் (30), 1வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் செந்தில்மாரிகண்ணன் (30), சாத்தூர் அருகே படர்ந்தால் தென்றல்நகரை சேர்ந்த பாலமுருகன் (26), லிங்கம்பட்டி அணணா நகரை சேர்ந்த முருகேஸ்வரன் (30), இலுப்பையூரணி பழத்தோட்ட நகரை சேர்ந்த தங்கமாரியப்பன் (33), வேலாயுதபுரம் 3வது தெருவை சேர்ந்த சீனிவாசகபெருமாள் (39) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரை கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Kovilpatti ,
× RELATED பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது