எட்டயபுரத்தில் கருத்தரங்கு

எட்டயபுரம், மார்ச் 17: எட்டயபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.  அழகர்சாமியின் 11ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.  எட்டயபுரம் கூட்டுறவு பால் பண்ணை சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். பாரதி ஆய்வாளர் இளசை.மணியன், தாலுகா விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமசந்திரன், அழகர்சாமி  முன்னிலை வகித்தனர். இதில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலாசிரியர் பொன்னீலன், கருத்தரங்கை துவக்கிவைத்துப் பேசினார். விவசாயிகளின் இன்றைய நிலை குறித்து வேளாண் விவசாய வல்லுநர் யமையன், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்புராஜ்,  இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் , நெல்லை மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன் பேசினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் நல்லையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு,  விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையா, மாநில குழு உறுப்பினர் லெனின், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி, மாதர் சங்க தாலுகா செயலாளர் கஸ்தூரி மற்றும் பொதுமக்கள் அழகர்சாமி படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க எட்டயபுரம்  தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories:

>