×

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை கலெக்டர் தகவல்

கரூர், மார்ச் 17: கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை. மாவட்ட அளவில் 34 நபர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி, காய்ச்சல் காரணமாக வந்தனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்ததில் 24 பேர்களுக்கு எந்தவித தொற்றும் இல்லை என தெரியவந்தது. மேலும், 10 பேர்களுக்கு சோதனை முடிவுகள் வரவில்லை. தற்போது ஒருவர் மட்டும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

Tags : district ,Karur ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி