×

மெஞ்ஞானபுரம் வங்கியில் நிதியியல் கல்வி முகாம்

உடன்குடி, மார்ச் 17: மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு நிதியியல் கல்வி முகாம் நடந்தது. முகாமிற்கு சங்க தலைவர் ஆதிலிங்கம் தலைமை வகித்தார். முகாமில் வாடிக்கையாளர்களுக்கு நிதியியல் தொடர்பான மின்னணு வங்கி சேவை, அவற்றை பயன்படுத்தும் முறையை குறித்தும் விவசாயம் கடன் வழங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சங்க செயலாளர் எஸ்தர் ராஜாத்தி நன்றி கூறினார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்க வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.Tags : Financial Education Camp ,Menzanapuram Bank ,
× RELATED பழநியில் நிதிசார் கல்வி முகாம்