×

மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாசரேத், மார்ச் 17: நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில், வைகுண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து வரவேற்றார். மாணவி முத்துச்செல்வி ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர், இறைவணக்கம் பாடல் பாடினர். வைகுண்டம் வழக்கறிஞர் ராம் பிரபா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை, எளிய மாணவிகளுக்கு புத்தாடை வழங்கினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். ஏரல் அருகே உள்ள கொட்டாரக்குறிச்சி பஞ்சாயத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பஞ். தலைவர் துரை தலைமை வகித்தார். அழகுபூமாதேவி துரை குத்து விளக்கேற்றினார். வைகுண்டம் ஊராட்சி ஒன்றிய மேலாளர் ஆஷா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி, உமாகனி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் மகளிருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பஞ். தலைவர் துரை மற்றும் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கொட்டாரக்குறிச்சி பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு கணக்காளர் அன்னபுஷ்பகலா நன்றி கூறினார். மெஞ்ஞானபுரம் அருகே கல்விளை டி.என்.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மகளிர் தின விழா மற்றும் மகளிர் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. செம்மறிக்குளம் பஞ். தலைவர் அகஸ்டா மரியதங்கம் தலைமை வகித்தார். குட்லைப் டிரஸ்ட் இயக்குநர் கணேசன் வரவேற்றார். ஆசிரியர் முத்துராமன் வரவேற்றார். வக்கீல் குமரேசன், மகளிருக்கான அடிப்படை சட்ட உரிமைகளை பற்றி பேசினார். குட்லைப் மகளிர் குழு கூட்டமைப்பு சார்பில் லிங்கம்மாள், தங்கஇசக்கி, அந்தோணி, முன்னாள் தபால்துறை அதிகாரி தமிழ்செல்வி, ஜோதி மல்லிகா பொன்மணி, வேலம்மாள், அன்னலட்சுமி, 1வது வார்டு கவுன்சிலர் கலாவதி, இளைஞர்கள் மர்காஷியஸ், செல்லையா, முருகன், சின்னத்துரை மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்துஜா நன்றி கூறினார்.

Tags : Women's Day Celebration ,
× RELATED தூத்துக்குடியில் மகளிர் தின விழா