×

ஓட்டப்பிடாரத்தில் அகில இந்திய ஓபன் கராத்தே போட்டி

ஸ்பிக்நகர், மார்ச் 17: ஓட்டப்பிடாரத்தில் சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளி சார்பில் ஓபன் கராத்தே போட்டி நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கட்டா மற்றும் சண்டை பிரிவில் போட்டிகள் நடந்தது. தலைமை நடுவராக  சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும், தமிழ்நாடு கராத்தே சங்க துணை தலைவருமான ரென்சி சுரேஷ்குமார் செயல்பட்டார். போட்டிக்கான ஏற்பாடுகளை சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில் மற்றும் துணை தலைவர்  சென்சாய் பாலாஜி, மாவட்ட செயலாளர்  சென்சாய் முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : India Open Karate Competition ,
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி