×

பண்டாரவிளையில் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் விளையாட்டு உபகரணம்

ஏரல், மார்ச் 17: பண்டாரவிளை இளைஞர்களுக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்சண்முகநாதன் எம்எல்ஏ தனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பண்டாரவிளை பாஸ்கர் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எம்எல்ஏ, விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து கேரம் போர்டு, கிரிக்கெட், வாலிபால், பேட்மிட்டன் மற்றும் உடற்பயிற்சிக்கான அனைத்து விளையாட்டு உபகரண பொருட்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் சுப்பிரமணியன், வெள்ளையா, குணசேகரன், செந்தூர்பாண்டி, பொன்னையா, பொன்ராஜ், பால்துரை, வீரதுரை, மணிகண்டன், சுரேஷ், செல்வராஜ், பீட்டர், அருள்ராஜ், ராஜா, பால்ராஜ், திருத்துவசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி