×

களியக்காவிளையில் பங்கு பேரவை செயலாளருக்கு சரமாரி கத்திக்குத்து

களியக்காவிளை, மார்ச் 17: களியக்காவிளையில் ஆலய பங்கு பேரவை செயலாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் வில்லியம் (50). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த இரு வருடங்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். தற்போது களியக்காவிளை சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக, அந்த பகுதியில் உள்ள புனித அந்ேதாணியார் ஆலயத்தில் பங்கு பேரவை செயலாளராகவும் வில்லியம் உள்ளார். இந்த நிலையில் முன்னாள் பங்கு பேரவை செயலாளர் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (45) என்பவருக்கும், வில்லியத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில்,  வில்லியம் வீட்டில் இருந்த போது, வாலிபர் ஒருவர் செல்போனில் பேசினார். மிகவும் அவசரமாக சந்தித்து பேச வேண்டும். களியக்காவிளை சந்திப்பு வரை வரலாமா? என கேட்டுள்ளார். அப்போது வில்லியம், களியக்காவிளை தூய அந்தோணியார் ஆலயத்தின் அருகே வரும்படி கூறி உள்ளார். அதற்கு வாலிபரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து வில்லியமும் தன்னை சந்திக்க வேண்டும் என்ற வாலிபரை பார்ப்பதற்காக, ஆலயத்தின் அருகே வந்தார். அப்போது அங்கு நின்று ெகாண்டு இருந்த வாலிபர் ஒருவர், வில்லியம் வருவதை பார்த்ததும் அவருடன் சென்று பேசினார். சிறிது நேரம் பேசிக் ெகாண்டு இருந்த போது திடீரென அந்த வாலிபர் வில்லியத்தை மிகவும் ஆபாசமாக திட்டி தகராறு செய்தார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கி இருந்த மேலும் சிலர் வந்து, வில்லியத்தை சரமாரியாக கத்தியால் குத்தினர். 9 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் தப்பியது. ரத்தம் வெளியேறிய நிலையில், வில்லியம் அங்கிருந்து நேராக களியக்காவிளை காவல் நிலையத்துக்கு வந்தார். ரத்த வெள்ளத்தில் வந்த அவரை பார்த்ததும், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வில்லியத்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, களியக்காவிளை காவல் நிலையத்தில் வில்லியம் புகார் அளித்தார்.
அதில், அலெக்ஸ் தூண்டுதலின் பேரில் பாறசாலையை சேர்ந்த சுமன் என்பவர் தலைமையில் வந்த கூலிப்படையினர் தன்னை கத்தியால் குத்தியதாக கூறி உள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வில்லியத்தை கத்தியால் குத்திய கும்பல், அதற்கு முன் அலெக்சுடன் பேசிக் ெகாண்டு இருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அலெக்ஸ், சுமன், பாறசாலையை சேர்ந்த ஜெஸ்டின் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் மீது போலீசார் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அலெக்ஸ்சை போலீசார் கைது செய்தனர்.

Tags : Stock Exchange ,
× RELATED புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர்...