×

இளம்பிள்ளையில் மினி மாரத்தான் போட்டி

இளம்பிள்ளை, மார்ச் 17: சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி சார்பில், திமுக தலைவர்  மு.க ஸ்டாலின் 67வது பிறந்த நாளையொட்டி,  இடங்கணசாலை பேரூர் காடையாம்பட்டியில், தளபதி மினி மாரத்தான் -2020 என்ற மாநில  அளவிலான போட்டி நேற்று  நடைபெற்றது. மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி போட்டியை கொடியசைத்து  துவக்கி வைத்தார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வம்  வரவேற்றார். போட்டியில் நிர்வாகிகள்  சுந்தரம், சம்பத், பாலகிருஷ்ணன், அன்பழகன், நிர்மலா, காவேரி, கந்தசாமி, பாஷா (எ) குணசேகரன், பெருமாள், ரமணி, பூபதி,  மாணிக்கம், தங்கவேல், கமலக்கண்ணன், மகேந்திரன், மணிகண்டன், சுரேந்தர், பார்த்திபன்,  ஜெகன், கார்த்திக் ,கண்ணன், முருகேசன், பரமசிவம், நல்லதம்பி,கோபி   உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில்  கோவையை சேர்ந்த  விஷ்ணு என்பவர், 12 கி.மீ மினி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்தார். 8 கி.மீ  போட்டியில்  இளம்பிள்ளை  ஐஸ்வர்யா, 5 கி.மீ போட்டியில் உத்திரபிரதேச மாணவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி  பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து கடையாம்பட்டி சந்தை  பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 200க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED 24 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு