×

மாவட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது

நாமக்கல், மார்ச் 17: நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி. அருளரசு எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். முக்கியமான போராட்டம் என்றால் மட்டும் அனுமதி அளிக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க போராட்டங்களை 15 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என அனுமதி பெற வரும் போது அறிவுறுத்தப்படும். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துபவர்கள்  கைது செய்யப்படுவார்கள். முடிந்தவரை போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தை தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழாவை தடுக்க முடியாது. ஆனால் 1,000 பேர் வரக்கூடிய இடத்தில் 300 பேர் என்ற அளவுக்கு கூட்டத்தை குறைத்துக் கொள்ளலாம். திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தவும் அனுமதியில்லை. இவ்வாறு எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...