×

₹10 லட்சம் கையாடல் செய்த தொண்டு நிறுவன பெண் மாயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 17: காவேரிப்பட்டணம் அருகே தொண்டு நிறுவனம் நடத்தி அதன்மூலம் ₹10 லட்சம் பணத்தை கையாடல் செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். காவேரிப்பட்டணம் இபிஎஸ் நகரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது  மனைவி சுந்தரி(48). இவர் வின்னர் மகளிர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில்,  தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனத்தின் கீழ், 10க்கும்  மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் குழு உறுப்பினர்கள் பெயரில் சுந்தரி வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால், அதை குழு உறுப்பினர்களுக்கு கொடுக்கவில்லை. இவ்வாறு சுமார் ₹10 லட்சம் வரை  கையாடல் செய்துள்ளார். இதனிடையே குழு உறுப்பினர்கள் பெயருக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து குழு உறுப்பினர்கள்  சுந்தரி வீட்டிற்கு சென்று தினமும் தகராறு செய்துள்ளனர். இதனால், சுந்தரியின்  வீட்டிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுந்தரி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுந்தரியின் மகன் தாமரைக்கண்ணன், காவேரிப்பட்டணம் போலீசில் தனது தாய்க்கும், குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை, அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Charity Woman Magic ,
× RELATED சூதாடிய 3 பேர் கைது