×

ராயக்கோட்டையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 17:ராயக்கோட்டையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொரோனா அறிகுறிகள், தடுப்பு முறைகள், கை கழுவும் முறைகள், கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்தல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கைகளை, குறைந்தபட்சம் 10 முறை கழுவ வேண்டும், கைகளை கழுவும் போது 7 முறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து, நோய் தொற்று குறித்து தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர் மூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகிலன், ஊராட்சி செயலாளர் சந்திரகுமார், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம், ஊராட்சி மன்ற துணை தலைவர் கஞ்சப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ராயக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் வந்த பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டன.

Tags : Coronavirus Awareness Camp ,
× RELATED காங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்