×

ஓசூர் பூ மார்கெட்டிற்கு பொதுமக்கள், வியாபாரிகள் மாஸ்க் அணிந்து வர வேண்டும்

ஓசூர், மார்ச் 17: ஓசூர் பூ மார்கெட்டிற்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என ப்ளவர் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓசூர்நகரானது தமிழக, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. ஓசூர் பூ மார்க்கெட்டில் ரோஜா, ஜர்பரா மற்றும் பட்டன்ரோஸ், சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் விற்பனை நடந்து வருகிறது. ஓசூர் மாநகரப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பூ வியாபாரிகள் வந்து செல்கின்றனர். எனவே, பூ மார்க்கெட்டுக்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என ப்ளவர் மார்க்கெட் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேசன் நிர்வாகிகள் கூறுகையில், ‘பொதுமக்கள் கூடும் இடங்கள் சுத்தம், சுகாதராமாகவும் இருக்க வேண்டும். சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இம்மாதம் 31ம் தேதி வரை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பூ மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், நுகர்வோர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்கள் உள்ளிட்ட அனைவரும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். மார்க்கெட் பகுதி சுகாதாரமாக இருக்க ஒத்துழைப்பு வேண்டும்,’ என்றனர்.

Tags : public ,merchants ,Hosur Flower Market ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...