×

ஓசூர் அரசு கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு

ஓசூர், மார்ச் 17: ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில், கல்லூரி முதல்வர் நாராயணன் தலைமை வகித்தார்.  முகாமில், கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், நோய் தடுப்பாக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்த்துறை தலைவர் வெங்கடேசன் கைகளை கழுவுதல் பற்றி செய்முறை செய்து காட்டினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தீபா உள்ளிட்டோர் பேசினர். இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Hosur Government College ,
× RELATED ஏற்காடு அண்ணாபூங்காவில் 3,500...