×

மூதாட்டியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி, மார்ச் 17: தர்மபுரி அருகே மூதாட்டியை கொன்ற வழக்கில் கூலிதொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தர்மபுரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கிட்டம்பட்டி வெள்ளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(29). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஜூன் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளி சந்தையில் நடந்த விழாவுக்கு சென்றார். விழாவின் போது ஒரு வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அந்த வீட்டில் இருந்த லட்சுமி என்ற 80வயது மூதாட்டி இங்கே நிற்கக்கூடாது என மணிகண்டனை சத்தம் போட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த மணிகண்டன் லட்மியை தாக்கினார். இதில் காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு நேற்று வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, நீதிபதி பரமராஜ். கூலிதொழிலாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ₹10ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா