×

ஹெல்மெட் விழிப்புணர்வு

அரூர், மார்ச் 17: தென்கரைக்கோட்டை- சிந்தல்பாடி சாலையில் சந்தப்பட்டி பிரிவு ரோடு அருகே சரவணன், குமரவேல் ஆகியோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கடந்த வாரம் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து நடந்த இடத்தை, கோபிநாதம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவ்வழியாக சென்ற, 50வாகன ஓட்டிகளை நிறுத்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர் தலைக்கவசம் அணிவோம் என்ற உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags :
× RELATED கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு மூலம்...