×

தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்

தர்மபுரி, மார்ச் 17: தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரி வழியாக நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அ.மல்லாபுரம் பொதுமக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரத்தை சேர்ந்த வெங்கடாஜலம், பெரியண்ணன், சரவணன் ஆகியோர், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பெட்டியில் செலுத்திய மனுவில் கூறியிருப்பதாவது: தென்பெண்ணை ஆற்றில் இருந்து மாரண்டஅள்ளி அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு, தண்ணீரை கொண்டு வரவேண்டும். அங்கிருந்து சின்னாறு வழியாக பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, அ.மல்லாபுரம், கொலசனஅள்ளி, பாலக்கோடு, புலிகரை, தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : river powdery lake ,
× RELATED காங்கயத்தில் தேங்காய் பருப்பு விலை...