×

தர்மபுரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி, மார்ச் 17:  தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உணவு திருவிழா நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. தர்மபுரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், போஷன் அபியான் திட்டத்தின் கீழ், கடந்த கடந்த 8ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை 15 நாட்களுக்கு போஷன் பக்வாடா ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 9வது நாளான நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில், உணவு திருவிழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் போஷன் பக்வாடா சம்மந்தமாக உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும் மாவட்ட திட்ட உதவியாளர்,  வட்டார உதவியாளர்கள் ஆகியோர், கொரோனா வைரஸ் சம்மந்தமான விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சி, கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கப்பட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து சம்மந்தமாக விழிப்புணர்வு பாடல்கள், கோலாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு  போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில், எஸ்பி ராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, மேற்பார்வையாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...