×

பிளஸ் 2 முடித்த பின்னரும் லேப்டாப் வழங்கவில்லை

காஞ்சிபுரம், மார்ச் 17: பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், லேப் டாப் வழங்கக் கோரி கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.பெரிய காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2017-19ம் கல்வி ஆண்டில் நாங்கள் பிளஸ் 2 படித்தோம். ஏழை குடும்பத்தைச் சேர்ந்க நாங்கள் 13 பேர், தற்போது டிப்ளமோ படித்து வருகிறோம்.

இந்நிலையில் நாங்கள் படித்த பள்ளியில், இதுவரை  லேப் டாப் வழங்கவில்லை. இதுபற்றி பள்ளி தலைஆசிரியரிடம் முறையிட்டபோதும், எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. நாங்கள் மேற்படிப்பு படிக்க லேப்டாப் இருந்தால் உதவியாக இருக்கும்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, எங்களுக்கு உடனடியாக லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஜூன் இறுதியில் ரிசல்டா?; சென்னை தவிர...