×

ஏலகிரியில் திமுக உட்கட்சி தேர்தல்

தர்மபுரி, மார்ச் 17: நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஏலகிரி கிராமத்தில் திமுக உட்கட்சி கிளை தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஏலகிரி கிராமத்தில் திமுகவின் உட்கட்சி கிளை தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும், தர்மபுரி தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான சந்திரமோகன், கட்சி நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் உட்கட்சி தேர்தல் நடந்தது. நிகழ்ச்சியில், கலை இலக்கிய அணி சந்திரமோகன், ஏலகிரி நடராஜன், இளைஞரணி ராஜகோபால், எம்எல்ஏ ரகு மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,election ,Yelagiri ,
× RELATED இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு...