×

மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் மாற்றம்

சென்னை, மார்ச். 17: மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக பங்கஜ்குமார் பன்சால், அங்கிருந்து மாற்றப்பட்டு நில நிர்வாக சீர்திருத்தத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை, ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்தார். கைத்தறித்துறை மற்றும் கைவினை, ஜவுளித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Metro Rail ,Executive Director Change ,
× RELATED சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை...