புழல் வடப்பெரும்பாக்கத்தில் குழாய் கசிவால் வீணாகும் குடிநீர்: அலட்சியத்தில் அதிகாரிகள்

புழல்: புழல் வடபெரும்பாக்கம் சாலையில் கால்வாய் மேலே செல்லும்  குழாயில் கசிவு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளது. இ்ங்கிருந்து  இருந்து மீஞ்சூர், மாத்தூர், மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம், புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் வழியாக புழலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலம் தினசரி குடிநீர் அனுப்பப்படுகிறது. இங்கிருந்து  சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், புழல் வடபெரும்பாக்கம் செல்லும் சாலை - புழல் ஏரியின் உபரி நீர் கால்வாய் மேலே செல்லும் குடிநீர் பைப் வால்வில் இருந்து தண்ணீர் கசிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. கொளுத்தும் வெயிலில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சிறுவர்கள் அதில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். இதுகுறித்து செல்போன் மூலம் சென்னை புழலிலுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டும், கசிவை நிறுத்துவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குழாய்களில் ஏற்பட்டுள கசிவை நீக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>