×

மால்கள், தியேட்டர்கள், லாட்ஜ்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்தது தொடர்பாக தினசரி அறிக்கை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லாட்ஜ்கள், தியேட்டர்கள், பேருந்துகள், ஏடிஎம் மையங்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். இது தொடர்பாக தினசரி அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மெட்ரோ ரயில் நிலையங்கிளின், டிக்கெட் கவுண்டர்கள், டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள், ரயில் பெட்டிகளின் கதவுகள் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளித்தது தொடர்பான தினசரி மாலை 4 மணிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவ அலுவலர் ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மால்கள், தியேட்டர்கள், லாட்ஜ்களில் கிருமிநாசினி தெளித்தது அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Tags : theaters ,lodges ,malls ,stations ,
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...