×

969 எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை, 1 லட்சத்து 42 ஆயிரத்து 243 பேர் மற்றும் காவல் துறையில் பணியாற்றும் 17 ஆயிரத்து 447 பேர் மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் கடந்த 12ம் தேதி எழுதினர்.

இந்த எழுத்து  தேர்வுக்கான முடிவுகள் நேற்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 1:5 விகிதத்தில் அடுத்த கட்ட தேர்வான உடற்கூறு  அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் சுழற்சி முறையில் நடைபெறும். இப்போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள தகுதி  பெற்றவர்களுக்கு அழைப்பு கடிதம விரைவில் இக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் அந்த அழைப்பு கடிதத்தை போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : SI Workplaces ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு...