×

கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையத்தில் கொரோனா பரவாமல் இருக்க கிரிமிநாசினி தெளிப்பு: வெளியூர் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரம்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கிரிமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்து சென்னை வரும் பயணிகள் மற்றும் வெளியூருக்கு செல்லும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனர் வர்கீஸ், துப்புரவு அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றிலும் நோய்தொற்று பரவுவதை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

கோயம்பேடு காய்கறி, பழங்கள் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். கோயம்பேடு மார்க்கெட்டின் அனைத்து பகுதிகளிலும் தொற்றுநோய் பரவுவதை தடுக்க கிருமிநாசினி புகை அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு இப்பணிகள் தீவிரமாக நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Corinna ,market ,bus station ,Coimbatore ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...