×

நெகிழியை தடை செய்ய ஒத்துழைக்க வேண்டும் வர்த்தக சங்கம் தீர்மானம்

முத்துப்பேட்டை, மார்ச் 17: கேரிபேக் மற்றும் நெகிழியை தடை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என வர்த்தக சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தக சங்க பொது உறுப்பினர் கூட்டம் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராஜசேகரன், துணைத் தலைவர்கள் காமராஜ், நடராஜன், துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, பாண்டியன், வள்ளிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கௌரவ ஆலோசகர் பன்னீர்செல்வம் வரவேற்றார். பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ் ஆண்டறிக்கை வசித்தார். பொருளாளர் ஜெயபால் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். இதில் மண்டல தலைவர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.  இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முத்துப்பேட்டை மின்சார வாரியம் 110கேவி பணியை துவங்கிட பணியை துரிதப்படுத்த வேண்டும், முத்துப்பேட்டை தனி தாலுகா அறிவிப்பை நடைமுறை படுத்த வேண்டும், முத்துப்பேட்டை பகுதியில் ரயில்வேக்கு கேட் கீப்பர்களை உடன் நியமனம் செய்ய வேண்டும், சென்னைக்கு நேரடியாக விரவு ரயில் சேவை துவங்க வேண்டும், முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை பிரிவு துவங்க வேண்டும், மருத்துவர்கள் தங்க குவாட்டர்ஸ் கட்ட வேண்டும், வௌ்ளகுளம் கரை சுடுகாட்டை சீரமைத்து தண்ணீர் வசதியை செய்து தரவேண்டும், வார சந்தையில் நிரந்தரமாக மின் விளக்கு வசதியும், சிறுநீர் கழிக்க கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும், முத்துப்பேட்டையில் கேரிபேக், நெகிழியை தடை செய்ய வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் தினசரி சங்கு குறிப்பிட நேரங்களில் ஒலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து