×

உழைப்பு, விடா முயற்சி இருந்தால் வெற்றிக்கனி நம் கைகளில் தவழும்

மன்னார்குடி, மார்ச் 17: மன்னார்குடி அருகே மேலவாசல் குமரபுரத்தில் இயங்கும் சதாசிவம் கதிர் காமவள்ளி மகளிர் கல்லூரி மற்றும் அருணாமலை கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சதாசிவம் கதிர்காமவள்ளி கல்வி நிறுவங்களின் தலைவர் டாக்டர் சதாசிவம் தலைமை வகித்தார்.மகளிர் கல்லூரி முதல்வர் கணேசன், கல்வியியல் கல்லூரி முதல்வர் நமதரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இளங்கலையில் 148, முதுகலையில் 20, கல்வியியலில் 61 பேர் என மொத்தம் 229 பேர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. செருமங்கலம் எஸ்கே பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் டாக்டர் சரவணக்குமார் செளத்ரி வாழ்த்துரை வழங்கினார். கணினி துறை தலைவர் லதா விழாவை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தஞ்சை மண்டல கல்வி கல்லூரி இயக்குனர் அறிவுடைநம்பி மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், போட்டிகள் நிறை ந்த இன்றைய உலகில் மாணவ மாணவியர்கள் தங்களின் திறமைகளை உயர்த்தி கொள்ள பல்வேறு போட்டி தேர்வுகளை எழுத வேண்டும். கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி கனி நம் கைகளில் தவழும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக கல்லூரி இயக்குனர் சர்மிளா தாகூர் வரவேற்றார். முடிவில் விலங்கியல் துறை தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags : Victory ,
× RELATED சுடர் வடிவேல் சுந்தரி